Monday, June 24, 2013

Best Friend

வாழ்க்கைல நண்பன் இல்லாதவன் ஏழை னு பெரியவங்க சொல்லியிருக்காங்க, அந்த வகையில Best Friend இல்லாதவன் கொடுத்து வச்சது அவ்வளவுதான்னு சொல்லலாம்..
வாழ்க்கயில நாம சந்திக்குற எல்லா நணபர்களிடமும் நாங்க 100 வீதம் உரிமை எடுத்து பழகுறது இல்ல. ஆனா சிலர் எங்கள திட்டாட்டி கூட நமக்கு தூக்கம் வராது. வாழ்க்கைல யாருகிட்டையும் நோண்டியாக விரும்பாதவங்க நண்பர்க்கிட்ட வொலன்டியராகி நோண்டியாவோம், அதுல ஒரு தனி த்ரில் இரக்கு. முடிஞ்சளவு நண்பர்கள தேடுங்க, குறைஞ்சது ஒரு Best Friend ஐ உருவாக்கிக்கிங்க....
வாழ்க்கை சுவாரஷ்யமா இருக்கும்

Thursday, May 9, 2013

எழுதுகிறேன் ஒரு கடிதம்!

வாழ்க்கைல எத சம்பாதிக்கிறோமோ இல்லையோ.... நல்ல மனுஷங்கள சம்பாதிக்கணும். நான் நிறைய மனுஷங்கள சம்பாதிசிருக்கேன். தற்காலிகமான ஒரு பிரிவு வரும்போது தெரிஞ்சுது... எவ்வளவு பேருக்கு என்ன பிடிச்சிருக்குன்னு... Grade 1 ல என்கூட படிச்சவங்க முதல்கொண்டு... நேத்து என்கூட தொழிலில் இணைந்துகொண்டவங்க வரைக்கும் என்மேல ரொம்ப அன்பு வச்சிருக்காங்க. நானும் அவங்ககூட அப்பிடித்தான். எவ்வளவு காலம் ங்குறது நட்புக்கு இல்ல. "வா மச்சான்" னு சொல்றவங்க முதல்கொண்டு "எலகிரி பங்க்" னு சொல்றவங்க வரைக்கும் எனக்கு நல்ல நண்பர்கள்.. நட்புக்கு  மொழி இல்ல. 


இன்னும் சில தினங்களில் வெளிநாடு செல்கிறேன், அழைப்பு எடுத்து ஒவ்வொரு நண்பர்களுக்கும் சொல்ல ஆசை, ஆனால் அதற்க்கு என் ஆயுள் போதாது. அத்தனை பேர் என் நண்பர்களாக இருக்காங்க. என் வாழ்க்கைல எப்பவுமே நான் முக்கியமா நினைக்கிறது என் நண்பர்கள்தான்.

போயிட்டு வாரேன் Friends 

இப்படிக்கு 
உண்மையுள்ள நண்பன்