வாழ்க்கைல நண்பன் இல்லாதவன் ஏழை னு பெரியவங்க சொல்லியிருக்காங்க, அந்த வகையில Best Friend இல்லாதவன் கொடுத்து வச்சது அவ்வளவுதான்னு சொல்லலாம்..
வாழ்க்கயில நாம சந்திக்குற எல்லா நணபர்களிடமும் நாங்க 100 வீதம் உரிமை எடுத்து பழகுறது இல்ல. ஆனா சிலர் எங்கள திட்டாட்டி கூட நமக்கு தூக்கம் வராது. வாழ்க்கைல யாருகிட்டையும் நோண்டியாக விரும்பாதவங்க நண்பர்க்கிட்ட வொலன்டியராகி நோண்டியாவோம், அதுல ஒரு தனி த்ரில் இரக்கு. முடிஞ்சளவு நண்பர்கள தேடுங்க, குறைஞ்சது ஒரு Best Friend ஐ உருவாக்கிக்கிங்க....
வாழ்க்கை சுவாரஷ்யமா இருக்கும்
Ru-Burn
உங்களை போல் ஒருவன்
Monday, June 24, 2013
Best Friend
Thursday, May 9, 2013
எழுதுகிறேன் ஒரு கடிதம்!
வாழ்க்கைல எத சம்பாதிக்கிறோமோ இல்லையோ.... நல்ல மனுஷங்கள சம்பாதிக்கணும். நான் நிறைய மனுஷங்கள சம்பாதிசிருக்கேன். தற்காலிகமான ஒரு பிரிவு வரும்போது தெரிஞ்சுது... எவ்வளவு பேருக்கு என்ன பிடிச்சிருக்குன்னு... Grade 1 ல என்கூட படிச்சவங்க முதல்கொண்டு... நேத்து என்கூட தொழிலில் இணைந்துகொண்டவங்க வரைக்கும் என்மேல ரொம்ப அன்பு வச்சிருக்காங்க. நானும் அவங்ககூட அப்பிடித்தான். எவ்வளவு காலம் ங்குறது நட்புக்கு இல்ல. "வா மச்சான்" னு சொல்றவங்க முதல்கொண்டு "எலகிரி பங்க்" னு சொல்றவங்க வரைக்கும் எனக்கு நல்ல நண்பர்கள்.. நட்புக்கு மொழி இல்ல.
இன்னும் சில தினங்களில் வெளிநாடு செல்கிறேன், அழைப்பு எடுத்து ஒவ்வொரு நண்பர்களுக்கும் சொல்ல ஆசை, ஆனால் அதற்க்கு என் ஆயுள் போதாது. அத்தனை பேர் என் நண்பர்களாக இருக்காங்க. என் வாழ்க்கைல எப்பவுமே நான் முக்கியமா நினைக்கிறது என் நண்பர்கள்தான்.
போயிட்டு வாரேன் Friends
இப்படிக்கு
உண்மையுள்ள நண்பன்
Wednesday, December 12, 2012
இரண்டாம் உலகின் நாடுகளை தேடி?
டிசம்பர் 21 பலர் உலகம் அழியும் என்று சொல்றாங்க. அது உண்மையோ பொய்யோ எனக்கு தெரியாது. என் மனசுல தோன்றிய ஒரு சின்ன கற்பனைதான் இது. வேலை முடிஞ்சு இப்போதான் வீடு வந்து சேர்ந்தேன். நான் வந்த பஸ்ஸில் ஒரு வெள்ளை மனிதனும் வந்தான். நீர்கொழும்பிளிருக்கும் ஒரு நட்சத்திர விடுதிக்கு போகும் வழியை கேட்டான். பஸ்ஸிலிருந்து இறங்கி அந்த மனிதனை அவன் செல்ல வேண்டிய பாதையில் அழைத்துக்கொண்டு போனேன். போகும் வழியில் அந்த மனிதனிடம் ஒரு கேள்வி கேட்டேன். "நீங்கள் உங்கள் விடுமுறையை (Vacation ) கழிக்கவா வந்தீர்கள் ?" என்று. அதற்க்கு அந்த மனிதன் சொன்ன பதில் என்னை நெகிழ வைத்தது. "விடுமுறை (Vacation ) என்று நீங்கள் சொல்வது ஓரிரு வாரங்கள் விடுமுறை எடுத்து ஊர் சுத்துவது. ஆனால் நான் என் தொழிலையே தூக்கிப்போட்டு விட்டு ஊர் சுத்துகிறேன், நான் ஒரு சஞ்சாரி " என்றார். நாம் வாழும் இந்த முதலாம் உலகின் நாடுகளை பல சஞ்சாரிகள் கண்டுபிடித்தனர். ஒருவேளை உலக அழிவிலிருந்து அந்த போலந்து சஞ்சாரி தப்பினால், அழிவின் பின்னர் எந்தெந்த நாடுகளை கண்டு பிடிப்பானோ?
Wednesday, November 14, 2012
வழிப்போக்கன் நான்
காலையில் விழித்தேன்,
சாலையில் நுழைந்தேன்
வைக்கும் ஒவ்வொரு அடியும்,
வாழ்வில் புது அர்த்தங்களை கட்டவிழ்த்தது.
முதல் பத்து நிமிடங்கள் பாடசாலை மாணவர்கள் என்னுடன் சாலையில் நடந்து வந்தார்கள்!
முதுகில் சுமையும், முகத்தில் புன்னகையும் ஏந்திய தேவலோக மொட்டுக்களை ரசித்தேன்!
புகைவிட்டுக்கொண்டே வந்தது, "ஒரு கதவு பஸ் வண்டி", தொத்தினேன் மிதிபலகையில்.
அடுத்த பத்து நிமிடங்கள் ரிஸ்கான பயணம். கை நழுவினால் பயணம் பாதியில் முற்றுப்பெறும்.
பத்து நிமிடங்கள் சகித்துக்கொண்டே வந்திறங்கினேன்.
தலைநகர் செல்லும் சொகுசு பஸ் எனக்காக காத்திருந்தது. ஒரு மணித்தியாலம் பயணித்தேன்.
தலைநகரை நெருங்கியதும் இறங்கினேன், வெயில் என்னை சுட்டது.
வாழ்க்கையின் உண்மையும் என்னை சுட்டது.
உலகில் உள்ள நாம் எல்லோருமே வழிப்போக்கர்கள்!
நாம் நடக்கும் பாதையில் நன்மையும் வரும் தீமையும் வரும் .
இன்பமும் வரும் , துன்பமும் வரும்.
இறைவன் சுழற்றுகிறான், யாவும் அசைகிறது.
இன்று சிரிப்பவன் , நேற்று அழுதிருப்பான்,
இன்று அழுபவன் நாளை சிரிப்பான்!
நிலை மாறும் உலகமடா இது!
உன்னை நல்வழிப்படுத்து. உன் பாதையை செவ்வையாக்கு!
பிறகு மற்றவன் பாதையை செவ்வையாக்கலாம் என்பது என் இறைவனின் வாக்கு!
உன்னை போல உன்னை நேசிப்பவன் எவனும் இல்லை. உனக்கு உண்மையாய் இரு.
மற்றவன் பசியை போக்குவதற்கு முந்து. மற்றவனின் வெறியை ஆற்றுவதற்கு முந்து.
இதுவே என் இறைவன் எனக்கு கற்றுக்கொடுத்த பாடம்.
என் பிறப்பின் அர்த்தம் முழுமையாகும் நாள் வெகு விரைவில்!
நான் வழிப்போக்கன் தான்!
ஆனால் எனக்கு பின் அந்த வழியில் வருபவன் என்னை தெரிந்துக்கொள்ளும் அளவில் நான் வாழ ஆசைபடுகிறேன்!
நான் வணங்கும் கடவுள் என் முன்னே செல்கிறார். எனக்கு முன்னே வருகிற ஆபத்துக்களை அவர் அகற்ற வல்லவர்.
சூரியனின் கீழே , பூமியின் மேலே , எல்லாம் மாயை!
நமக்கும் மேல் ஒரு சக்தி உண்டு!
Sunday, October 28, 2012
திமுருதான் வேலி!
அண்மையில் நடிகை ஷோபனாவின் நடன நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அங்கு செல்லும் வரை பரத நாட்டியத்தில் எனக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை. ஆனால் அங்கு நடிகை ஷோபனாவும் அவரது குழுவினரும் காட்டிய திறமையில் என்னை நானே மறந்துவிட்டேன். ஷோபனா நடனமாடும்போது நடனத்தின் 50 வீதத்தை அவரது முகமே நிறைவுசெய்து விடுகிறது. அவரை போலவே அவரது குழுவினரும் மிக பிரமாதமாக நடனமாடினர். ஷோபனாவின் நடனத்தை விட பாராட்டவேண்டிய விடயம் ஒன்று உண்டு. அவரை யாரும் இலகுவில் நெருங்க முடியாது. அவருடன் எப்படியாவது ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என என்னைப்போலவே பலரும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் அவர் அனுமதிக்க மாட்டார் என ஏற்பாட்டாளர்கள் கூறினர். இது எனக்கு ஏற்கெனவே தெரியும். ஷோபனா வாழும் விதம் என்னை மிக கவர்ந்துள்ளது. கமல் சொல்வது போல அழகும் திறமையும் கொண்டவர்களுக்கு. திமிருதான் வேலி. Dot
Wednesday, September 19, 2012
துறவியை கண்டேன்!
ரொம்பவும் சோர்வான நேரம் அது. வேலை முடிந்து புதிதாக பாவனைக்கு விடப்பட்ட சொகுசு(?) அரச பஸ் வண்டியல் ஏறி ஜன்னல் ஓரம் அமர்ந்துக்கொண்டேன்.
பஸ் தனது பயணத்தை ஆரம்பிக்க 10 நிமிடங்கள் இருந்தது.
அப்பொழுது பஸ்சின்
முன் கதவு வாயிலாக ஒரு துறவி ஏறினார். உடனே அவருக்காக ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்திருந்த இஸ்லாமிய நண்பர் அவருக்கு இடம்கொடுக்க எழுந்து நின்றார். அந்த நண்பரை பார்த்து துறவி சொன்னார், "எழும்ப வேண்டாம், நான் பஸ்ஸில் அமர வரவில்லை, யாசகம் கேட்கவே வந்தேன்" என்றார். ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு (உண்மையான) துறவியை கண்டது மகிழ்ச்சியாய் இருந்தது.
இப்போ யாருப்பா அப்டி இருக்காங்க? சில துறவிகள் தங்களை காத்துக்கொள்ள துப்பாக்கிகூட வைத்திருக்கிறார்களாம். அண்மையில் ஒரு துறவியின் கையில் Apple iPhone ! துறவி என்பதன் அர்த்தமே ஆசைகளை வெறுத்து அனைத்தையும் துறப்பது. ஏதோ எழுதனும் னு தோனுச்சி. Dot
Sunday, September 16, 2012
இன்று ஆலயத்தில் கற்ற இரண்டு விடயங்கள்
இன்று ஆலயத்தில் கற்ற இரண்டு விடயங்களை உங்களுடனும் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன். முதலில் ஒரு கதை. ஒரு தாய் தன மகனை அழைத்துக்கொண்டு மகாத்மா காந்தியிடம் சென்று சொன்னாரம், ஐயா என் மகன் எவ்வளவு சொன்னாலும் கேட்கிறான் இல்லை, திருட்டு தனமாக சீனி சாப்பிடுகிறான் என்று. அதை கேட்ட மகாத்மா அந்த சிறுவனுக்கு புத்திமதி சொல்லாமல் இரண்டு வாரம் கழித்து வரும்படி தாயிடம் சொன்னாராம். தாயும் சரி என்று கூறி சென்றுவிட்டார். இரண்டு வாரம் கழித்து மீண்டும் வந்து அதே புகாரை முன் வைத்தார்.
அப்பொழுது காந்தி சிறுவனைப்பார்த்து சொன்னாராம் தம்பி இனிமேல் சீனி சாப்பிடகூடாது என்று. உடனே தாய்க்கு கோபம் வந்துவிட்டது. தாய் காந்தியடிகளை பார்த்து கேட்டாராம் இதை சொல்லவா இரண்டுவாரம் கழித்து வர சொன்னீர்கள் என்று. காந்தி சிரித்துக்கொண்டே சொன்னாராம், இரண்டுவாரங்களுக்கு முன்னர் நானும் அந்த தவறை செய்துகொண்டுதான் இருந்தேன். இப்பொழுது திருத்திக்கொண்டேன் என்று. இதிலிருந்து என்ன தெரிகிறது? ஒருவரின் தவறை திருத்த முன்னர் நாம் அந்த தவறை செய்யாமல் இருக்க வேண்டும்.
அடுத்த விடயம் : ஒரு சிறுமி தன் தந்தையுடன் ஒரு ஆடுபாலத்தை கடந்து சென்றுகொண்டிருந்தாள் . அப்பொழுது தந்தை சொன்னார் மகளே என் கையை பிடித்துக்கொள் என்று. உடனே சிறுமி சொன்னாளாம் இல்லை நீங்கள் என் கையை பிடித்துகொள்ளுங்கள் என்று. தந்தை சிரித்துக்கொண்டே கேட்டாராம் ஏன் அப்பிடி? இரண்டும் ஒன்றுதானே என்று. அதற்க்கு அந்த சிறுமி பிரதியுத்தரவாக : நான் உங்கள் கையை பிடித்து நடக்கும் போது பயம் வந்தால் உங்கள் கையை விட்டுவிட வாய்ப்பு உண்டு. அதே நீங்கள் என் கையை பிடித்திருந்தால் மரணமே வந்தாலும் என் கையை இறுக்க பிடிதுக்கொள்வீர்கள் என்றாளாம். அதே போல தான் கடவுளும். நீங்கள் கடவுளின் கையை
பிடித்து
நடப்பதை விட கடவுளுக்கு உங்கள் கையை பிடிக்க இடம் கொடுங்கள்.
Subscribe to:
Posts (Atom)


