Sunday, September 16, 2012

இன்று ஆலயத்தில் கற்ற இரண்டு விடயங்கள்

இன்று ஆலயத்தில் கற்ற இரண்டு விடயங்களை உங்களுடனும் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன். முதலில் ஒரு கதை. ஒரு தாய் தன மகனை அழைத்துக்கொண்டு மகாத்மா காந்தியிடம் சென்று சொன்னாரம், ஐயா என் மகன் எவ்வளவு சொன்னாலும் கேட்கிறான் இல்லை, திருட்டு தனமாக சீனி சாப்பிடுகிறான் என்று. அதை கேட்ட மகாத்மா அந்த சிறுவனுக்கு புத்திமதி சொல்லாமல் இரண்டு வாரம் கழித்து வரும்படி தாயிடம் சொன்னாராம். தாயும் சரி என்று கூறி சென்றுவிட்டார். இரண்டு வாரம் கழித்து மீண்டும் வந்து அதே புகாரை முன் வைத்தார்.  அப்பொழுது   காந்தி  சிறுவனைப்பார்த்து சொன்னாராம் தம்பி இனிமேல் சீனி சாப்பிடகூடாது என்று. உடனே  தாய்க்கு கோபம் வந்துவிட்டது. தாய் காந்தியடிகளை பார்த்து கேட்டாராம் இதை சொல்லவா இரண்டுவாரம் கழித்து வர சொன்னீர்கள் என்று. காந்தி சிரித்துக்கொண்டே  சொன்னாராம், இரண்டுவாரங்களுக்கு முன்னர் நானும் அந்த தவறை செய்துகொண்டுதான் இருந்தேன். இப்பொழுது திருத்திக்கொண்டேன் என்று. இதிலிருந்து  என்ன தெரிகிறது? ஒருவரின் தவறை திருத்த முன்னர் நாம் அந்த தவறை செய்யாமல் இருக்க வேண்டும்.


அடுத்த விடயம் : ஒரு சிறுமி தன் தந்தையுடன் ஒரு ஆடுபாலத்தை கடந்து சென்றுகொண்டிருந்தாள் . அப்பொழுது  தந்தை சொன்னார் மகளே என் கையை பிடித்துக்கொள் என்று. உடனே சிறுமி சொன்னாளாம் இல்லை நீங்கள் என் கையை பிடித்துகொள்ளுங்கள் என்று. தந்தை சிரித்துக்கொண்டே கேட்டாராம் ஏன் அப்பிடி? இரண்டும் ஒன்றுதானே என்று. அதற்க்கு அந்த சிறுமி பிரதியுத்தரவாக : நான் உங்கள் கையை பிடித்து நடக்கும் போது பயம் வந்தால் உங்கள் கையை விட்டுவிட வாய்ப்பு உண்டு. அதே நீங்கள் என் கையை பிடித்திருந்தால் மரணமே வந்தாலும் என் கையை இறுக்க பிடிதுக்கொள்வீர்கள்  என்றாளாம். அதே போல தான் கடவுளும். நீங்கள் கடவுளின் கையை  பிடித்து   நடப்பதை விட கடவுளுக்கு உங்கள் கையை பிடிக்க இடம் கொடுங்கள்.

No comments:

Post a Comment