இந்த நாள் என் வாழ்வில் ஒரு முக்கியமான நாள், என் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள பெற்ற நாள், அதே நேரம் சில விஷயங்கள இழந்த நாள். இரண்டு வருடங்களுக்கு முன்னாடி என் மாமா இதே நாள்ல இறந்துட்டாரு. போன வருஷம் இதே நாள்ல நான் வெற்றிக்கு வந்தேன். ஒரு வருஷம் ஆயிடுச்சி. என்ன வளர்த்தது வெற்றிதான். நான் எப்போ வேணும்னாலும், எங்க இருந்தாலும் இத சொல்லுவேன். என்னை ஊடகத்துக்கு அறிமுகபடுத்தின என் குரு லோஷன் அண்ணாவை எப்பவும் மறக்க மாட்டேன். வெற்றி ல நான் வளரனும் னு ஆசைப்பட்ட என் முன்னோடிகளான ஹிஷாம் அண்ணா, விமல் அண்ணா, பிரதீப் அண்ணா, வைதேகி அக்கா இவங்க எல்லாருக்கும் எனது நன்றிகள்.
வெற்றிக்கு வந்த முதல் நாளே லேட்டா தான் வந்தேன்.. முகம் முழுக்க தாடியோட, என்னை பார்த்ததும் அண்ணா கேட்ட முதல் வார்த்தை "ஏன் தாடி?" நான் ஒண்ணுமே பேச இல்ல. தர்ஷி பக்கத்துல ஒரு சீட் இருந்தது அங்க போயிட்டு உட்கார்ந்தேன்.. அன்றிலிருந்து இன்று வரை அவங்க என் best friend .
வெற்றியில் நான் செய்த முதல் நிகழ்ச்சி இசை ராஜாங்கம். 5 நாள் தொடர்ந்து செய்தேன். உத்தியோகப்பூர்வமாக ஒரு அறிவிப்பாள(ல)னாக அறிமுகமானது "கேளு ராஜா கேளு" நிகழ்ச்சியில். அது ஒரு சுவாரஷ்யமான கதை. முதலில் நானும் வனிதாவும் ஒன்றாக கற்றது கையளவு செய்வதாகத்தான் திட்டம் இருந்தது. நான்காவது இசை ராஜாங்கம் முடிச்சிட்டு வீட்ல போய் நல்லா தூங்கிட்டு இருந்தேன். வைதேகி அக்கா call பண்ணாங்க, தம்பி next monday நீங்களும் நானும்தான் programme னு சொன்னங்க, நான் அப்புடியே ஷாக் ஆயிட்டேன்!! . ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஆனா அந்த சந்தோஷம் நிலைக்க இல்ல. அவங்க ஒரு வாரம்தான் செய்தாங்க அப்புறம் கனடா போய்ட்டாங்க. ரொம்ப கவலைய இருந்தது. அப்புறம் தினேஷாவுடன் நிகழ்ச்சி 150 நாட்களுக்கு மேல் நகர்ந்தது. தினேஷா வ Easy யா கடிக்கலாம், programme டைம் ல என்ன நம்பி நிறைய விஷயம் சொல்லுவாங்க நான் அத உல்டாவாக்கி ON AIR ல சொல்லிருவேன் :D . அப்புறம் தர்ஷியோட programme செய்யணும் னு ஒரு அவல நிலை ( Just kidding ) தர்ஷிய Easy யா கடிக்க முடியாது. செம உஷார் பா(ர்)ட்டி. இன்று வரை programme சிறப்பா தொடருதுன்னா அதுக்கு காரணம், அன்பான நேயர்கள்.
வெற்றியில் என்ன நிகழ்ச்சி செய்ய விருப்பம் னு கேட்டால்.. அன்றும் இன்றும் என்றும் நான் சொல்லும் ஒரே பதில், "கேளு ராஜா கேளு"
வாழ்த்துகள் அண்ணா...
ReplyDeleteதங்கள் வெற்றிப் பயணம் சிறக்க நாம் என்றும் துணையிருப்பாம்...
தங்களுடன் நீங்கள் அறிமுகமான தினத்தில் பேசியது மறக்கமுடியாதது..
all the best.
ReplyDelete