இதை நான் எனது "வெற்றி"க்காக செய்தேன். ஆனால் இந்த படத்தின் வெற்றிக்கு 100 வீதம் நான் காரணம் அல்ல. பல நேயர்களின் வாழ்த்துக்களையும், கருத்துகளையும் வைத்து பார்த்தால். வெற்றிக்கு முதல் காரணம் கதை. இரண்டாவது முக்கியமான காரணம் தர்ஷியின் இயல்பான நடிப்பு. வசனங்களை நான் எழுதும்போது என் மனதில் எப்பொழுதும் அதற்க்கான ஒரு காட்சி ஓடிக்கொண்டே இருக்கும். என் மனதில் இருந்த காட்சியை படத்தில் நான் எதிர்பார்த்ததையும்விட சிறப்பாக கொண்டுவந்த நண்பி தர்ஷிக்கு நன்றிகள்.
"கண்கள் நீயே" கதைக்கு முதலில் நான் வைத்த பெயர் அலுவலகத்தில் என் நெருங்கிய நண்பர்களுக்கு பிடிக்கவில்லை. பின் ஒரு பொருத்தமான பெயரை தேடினோம். கடைசியில் "கண்கள் நீயே" எனும் பெயரை எனக்கு தெரிவுசெய்து தந்தவர் வெற்றி டிவி இன் ப்ரியா அக்கா! முழுக்கதையையும் யோசித்து எழுதிமுடிக்க 2 வாரங்கள் சென்றன. ஒலிப்பதிவிற்கு இரண்டு மூன்று நாட்கள் சென்றன. தயாரிப்பு பணிகளை நிறைவு செய்ய மொத்தமாக 16 மணித்தியாலங்கள் செலவாகின. உண்மையை சொல்வதாயின் படம் ஒலிப்பரப்பாக 30 நிமிடங்களுக்கு முன்னர்தான் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்தன.
அடுத்து இரண்டு கதைகள் கைவசம் உள்ளன. ஒன்று யாரும் எதிர்பாராத ஒருவரின் சுயசரிதை. அடுத்தது ஒரு முழுநீள நகைச்சுவை படம்.
வெற்றியின் பௌர்ணமி திரையில் ஏனைய வெற்றி உறுப்பினர்களின் கதைகளும் இனிவரும் நாட்களில் உங்களை தேடி வரும்.
எனது வானொலி படங்களில் நடிக்கும் ஆர்வம் உங்களுக்கு இருந்தால் எனக்கு மின் அஞ்சல் செய்யுங்கள்.
rjruburn@gmail.com
ஒரு திரைப்படத்தினை இயக்கி அதி உயர் விருது வாங்காமல் என் விழிகள் உறங்காது!
No comments:
Post a Comment