Wednesday, December 12, 2012

இரண்டாம் உலகின் நாடுகளை தேடி?



டிசம்பர் 21 பலர் உலகம் அழியும் என்று சொல்றாங்க. அது உண்மையோ பொய்யோ எனக்கு தெரியாது. என் மனசுல தோன்றிய ஒரு சின்ன கற்பனைதான் இது. வேலை முடிஞ்சு இப்போதான் வீடு வந்து சேர்ந்தேன். நான் வந்த பஸ்ஸில் ஒரு வெள்ளை மனிதனும் வந்தான். நீர்கொழும்பிளிருக்கும் ஒரு நட்சத்திர விடுதிக்கு போகும் வழியை கேட்டான். பஸ்ஸிலிருந்து இறங்கி அந்த மனிதனை அவன் செல்ல வேண்டிய பாதையில் அழைத்துக்கொண்டு போனேன். போகும் வழியில் அந்த மனிதனிடம் ஒரு கேள்வி கேட்டேன். "நீங்கள் உங்கள் விடுமுறையை (Vacation ) கழிக்கவா வந்தீர்கள் ?" என்று. அதற்க்கு அந்த மனிதன் சொன்ன பதில் என்னை நெகிழ வைத்தது. "விடுமுறை (Vacation ) என்று நீங்கள் சொல்வது ஓரிரு வாரங்கள் விடுமுறை எடுத்து ஊர் சுத்துவது. ஆனால் நான் என் தொழிலையே தூக்கிப்போட்டு விட்டு ஊர் சுத்துகிறேன், நான் ஒரு சஞ்சாரி " என்றார். நாம் வாழும் இந்த முதலாம் உலகின் நாடுகளை பல சஞ்சாரிகள் கண்டுபிடித்தனர். ஒருவேளை உலக அழிவிலிருந்து அந்த போலந்து சஞ்சாரி தப்பினால், அழிவின் பின்னர் எந்தெந்த நாடுகளை கண்டு பிடிப்பானோ?

Wednesday, November 14, 2012

வழிப்போக்கன் நான்

காலையில் விழித்தேன்,
சாலையில் நுழைந்தேன் 
வைக்கும் ஒவ்வொரு அடியும்,
வாழ்வில் புது அர்த்தங்களை கட்டவிழ்த்தது.
முதல் பத்து  நிமிடங்கள் பாடசாலை மாணவர்கள் என்னுடன் சாலையில் நடந்து வந்தார்கள்!
முதுகில் சுமையும், முகத்தில் புன்னகையும் ஏந்திய தேவலோக  மொட்டுக்களை ரசித்தேன்!
புகைவிட்டுக்கொண்டே வந்தது, "ஒரு கதவு பஸ் வண்டி", தொத்தினேன் மிதிபலகையில்.
அடுத்த பத்து நிமிடங்கள் ரிஸ்கான பயணம். கை நழுவினால் பயணம் பாதியில் முற்றுப்பெறும்.
பத்து நிமிடங்கள் சகித்துக்கொண்டே வந்திறங்கினேன்.
தலைநகர் செல்லும் சொகுசு பஸ் எனக்காக காத்திருந்தது. ஒரு மணித்தியாலம் பயணித்தேன்.
தலைநகரை நெருங்கியதும் இறங்கினேன், வெயில் என்னை சுட்டது. 
வாழ்க்கையின் உண்மையும் என்னை சுட்டது.
உலகில் உள்ள நாம் எல்லோருமே வழிப்போக்கர்கள்!
நாம் நடக்கும் பாதையில் நன்மையும் வரும் தீமையும் வரும் .
இன்பமும் வரும் , துன்பமும் வரும். 
இறைவன் சுழற்றுகிறான், யாவும் அசைகிறது.
இன்று சிரிப்பவன் , நேற்று அழுதிருப்பான்,
இன்று அழுபவன் நாளை சிரிப்பான்!
நிலை மாறும் உலகமடா இது!
உன்னை நல்வழிப்படுத்து. உன் பாதையை செவ்வையாக்கு!
பிறகு மற்றவன் பாதையை செவ்வையாக்கலாம் என்பது என் இறைவனின் வாக்கு!
உன்னை போல உன்னை நேசிப்பவன் எவனும் இல்லை. உனக்கு உண்மையாய் இரு.
மற்றவன் பசியை போக்குவதற்கு முந்து. மற்றவனின் வெறியை ஆற்றுவதற்கு முந்து.
இதுவே என் இறைவன் எனக்கு கற்றுக்கொடுத்த பாடம்.
என் பிறப்பின் அர்த்தம் முழுமையாகும் நாள் வெகு விரைவில்!
நான் வழிப்போக்கன் தான்!
ஆனால் எனக்கு பின் அந்த வழியில் வருபவன் என்னை தெரிந்துக்கொள்ளும் அளவில் நான் வாழ ஆசைபடுகிறேன்!

நான் வணங்கும் கடவுள் என்  முன்னே செல்கிறார். எனக்கு முன்னே வருகிற ஆபத்துக்களை அவர் அகற்ற வல்லவர்.
சூரியனின் கீழே , பூமியின் மேலே , எல்லாம் மாயை!

நமக்கும் மேல் ஒரு சக்தி உண்டு!

Sunday, October 28, 2012


    திமுருதான் வேலி!


அண்மையில் நடிகை ஷோபனாவின் நடன நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அங்கு செல்லும் வரை பரத நாட்டியத்தில் எனக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை. ஆனால் அங்கு நடிகை ஷோபனாவும் அவரது குழுவினரும் காட்டிய திறமையில் என்னை நானே மறந்துவிட்டேன். ஷோபனா நடனமாடும்போது நடனத்தின் 50 வீதத்தை அவரது முகமே நிறைவுசெய்து விடுகிறது. அவரை போலவே அவரது குழுவினரும் மிக பிரமாதமாக நடனமாடினர். ஷோபனாவின் நடனத்தை விட பாராட்டவேண்டிய விடயம் ஒன்று உண்டு. அவரை யாரும் இலகுவில் நெருங்க முடியாது. அவருடன் எப்படியாவது ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என என்னைப்போலவே பலரும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் அவர் அனுமதிக்க மாட்டார் என ஏற்பாட்டாளர்கள் கூறினர். இது எனக்கு ஏற்கெனவே தெரியும். ஷோபனா  வாழும்  விதம் என்னை மிக கவர்ந்துள்ளது. கமல் சொல்வது போல அழகும் திறமையும் கொண்டவர்களுக்கு. திமிருதான் வேலி. Dot

Wednesday, September 19, 2012

துறவியை கண்டேன்!

ரொம்பவும் சோர்வான நேரம் அது. வேலை முடிந்து புதிதாக பாவனைக்கு விடப்பட்ட சொகுசு(?) அரச பஸ் வண்டியல் ஏறி ஜன்னல் ஓரம் அமர்ந்துக்கொண்டேன். 
பஸ் தனது பயணத்தை ஆரம்பிக்க 10 நிமிடங்கள் இருந்தது.  அப்பொழுது  பஸ்சின்  முன்  கதவு வாயிலாக ஒரு துறவி  ஏறினார். உடனே அவருக்காக ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்திருந்த இஸ்லாமிய நண்பர் அவருக்கு இடம்கொடுக்க எழுந்து நின்றார். அந்த நண்பரை பார்த்து துறவி  சொன்னார், "எழும்ப வேண்டாம், நான் பஸ்ஸில் அமர வரவில்லை, யாசகம் கேட்கவே வந்தேன்" என்றார். ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு (உண்மையான) துறவியை கண்டது மகிழ்ச்சியாய் இருந்தது. 

இப்போ யாருப்பா அப்டி இருக்காங்க? சில துறவிகள்  தங்களை காத்துக்கொள்ள துப்பாக்கிகூட வைத்திருக்கிறார்களாம். அண்மையில் ஒரு துறவியின் கையில் Apple iPhone ! துறவி என்பதன் அர்த்தமே ஆசைகளை வெறுத்து அனைத்தையும் துறப்பது. ஏதோ எழுதனும் னு தோனுச்சி.  Dot

Sunday, September 16, 2012

இன்று ஆலயத்தில் கற்ற இரண்டு விடயங்கள்

இன்று ஆலயத்தில் கற்ற இரண்டு விடயங்களை உங்களுடனும் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன். முதலில் ஒரு கதை. ஒரு தாய் தன மகனை அழைத்துக்கொண்டு மகாத்மா காந்தியிடம் சென்று சொன்னாரம், ஐயா என் மகன் எவ்வளவு சொன்னாலும் கேட்கிறான் இல்லை, திருட்டு தனமாக சீனி சாப்பிடுகிறான் என்று. அதை கேட்ட மகாத்மா அந்த சிறுவனுக்கு புத்திமதி சொல்லாமல் இரண்டு வாரம் கழித்து வரும்படி தாயிடம் சொன்னாராம். தாயும் சரி என்று கூறி சென்றுவிட்டார். இரண்டு வாரம் கழித்து மீண்டும் வந்து அதே புகாரை முன் வைத்தார்.  அப்பொழுது   காந்தி  சிறுவனைப்பார்த்து சொன்னாராம் தம்பி இனிமேல் சீனி சாப்பிடகூடாது என்று. உடனே  தாய்க்கு கோபம் வந்துவிட்டது. தாய் காந்தியடிகளை பார்த்து கேட்டாராம் இதை சொல்லவா இரண்டுவாரம் கழித்து வர சொன்னீர்கள் என்று. காந்தி சிரித்துக்கொண்டே  சொன்னாராம், இரண்டுவாரங்களுக்கு முன்னர் நானும் அந்த தவறை செய்துகொண்டுதான் இருந்தேன். இப்பொழுது திருத்திக்கொண்டேன் என்று. இதிலிருந்து  என்ன தெரிகிறது? ஒருவரின் தவறை திருத்த முன்னர் நாம் அந்த தவறை செய்யாமல் இருக்க வேண்டும்.


அடுத்த விடயம் : ஒரு சிறுமி தன் தந்தையுடன் ஒரு ஆடுபாலத்தை கடந்து சென்றுகொண்டிருந்தாள் . அப்பொழுது  தந்தை சொன்னார் மகளே என் கையை பிடித்துக்கொள் என்று. உடனே சிறுமி சொன்னாளாம் இல்லை நீங்கள் என் கையை பிடித்துகொள்ளுங்கள் என்று. தந்தை சிரித்துக்கொண்டே கேட்டாராம் ஏன் அப்பிடி? இரண்டும் ஒன்றுதானே என்று. அதற்க்கு அந்த சிறுமி பிரதியுத்தரவாக : நான் உங்கள் கையை பிடித்து நடக்கும் போது பயம் வந்தால் உங்கள் கையை விட்டுவிட வாய்ப்பு உண்டு. அதே நீங்கள் என் கையை பிடித்திருந்தால் மரணமே வந்தாலும் என் கையை இறுக்க பிடிதுக்கொள்வீர்கள்  என்றாளாம். அதே போல தான் கடவுளும். நீங்கள் கடவுளின் கையை  பிடித்து   நடப்பதை விட கடவுளுக்கு உங்கள் கையை பிடிக்க இடம் கொடுங்கள்.

Friday, April 6, 2012

"கண்கள் நீயே"

"கண்கள் நீயே" வானொலி படத்தின் வெற்றியின் பின்னர் அம்மா, அப்பா, நண்பர்கள், நேயர்கள் என பலரிடமும் இருந்து வந்த வாழ்த்துக்கள், ஒஸ்கார் கிடைத்த உணர்வை எனக்கு வழங்கியது. வானொலி படம் நிறைவுபெற்று கலையகத்தில் நான் விடைப்பெற்று ஒலிவாங்கியை நிறுத்தும்போது... ஒலிம்பிக் போட்டி ஒன்றில் தங்கப்பதக்கம் வென்ற வீரனைப்போல் உணர்ந்தேன்.

இதை நான் எனது "வெற்றி"க்காக செய்தேன். ஆனால் இந்த படத்தின் வெற்றிக்கு 100 வீதம் நான் காரணம் அல்ல. பல நேயர்களின் வாழ்த்துக்களையும், கருத்துகளையும் வைத்து பார்த்தால். வெற்றிக்கு முதல் காரணம் கதை. இரண்டாவது முக்கியமான காரணம் தர்ஷியின் இயல்பான நடிப்பு. வசனங்களை நான் எழுதும்போது என் மனதில் எப்பொழுதும் அதற்க்கான ஒரு காட்சி ஓடிக்கொண்டே இருக்கும். என் மனதில் இருந்த காட்சியை படத்தில் நான் எதிர்பார்த்ததையும்விட சிறப்பாக கொண்டுவந்த நண்பி தர்ஷிக்கு நன்றிகள்.

"கண்கள் நீயே" கதைக்கு முதலில் நான் வைத்த பெயர் அலுவலகத்தில் என் நெருங்கிய நண்பர்களுக்கு பிடிக்கவில்லை. பின் ஒரு பொருத்தமான பெயரை தேடினோம். கடைசியில் "கண்கள் நீயே" எனும் பெயரை எனக்கு தெரிவுசெய்து தந்தவர் வெற்றி டிவி இன் ப்ரியா அக்கா! முழுக்கதையையும் யோசித்து எழுதிமுடிக்க 2 வாரங்கள் சென்றன. ஒலிப்பதிவிற்கு இரண்டு மூன்று நாட்கள் சென்றன. தயாரிப்பு பணிகளை நிறைவு செய்ய மொத்தமாக 16 மணித்தியாலங்கள் செலவாகின.  உண்மையை சொல்வதாயின் படம் ஒலிப்பரப்பாக 30 நிமிடங்களுக்கு முன்னர்தான் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்தன.

அடுத்து இரண்டு கதைகள் கைவசம் உள்ளன. ஒன்று யாரும் எதிர்பாராத ஒருவரின் சுயசரிதை. அடுத்தது ஒரு முழுநீள நகைச்சுவை படம்.

வெற்றியின் பௌர்ணமி திரையில் ஏனைய வெற்றி உறுப்பினர்களின் கதைகளும் இனிவரும் நாட்களில் உங்களை தேடி வரும். 
எனது வானொலி படங்களில் நடிக்கும் ஆர்வம் உங்களுக்கு இருந்தால் எனக்கு மின் அஞ்சல் செய்யுங்கள். 
rjruburn@gmail.com

ஒரு திரைப்படத்தினை இயக்கி அதி உயர் விருது வாங்காமல் என் விழிகள் உறங்காது!

Wednesday, March 7, 2012

"அந்த 25 நாட்கள்"


புதுசு புதுசா ஏதாவது பண்ணனும் என்கிற ஆர்வக்கோளாறு எனக்கு அதிகம். சின்ன வயசிலையே பொய்க்கதைகள் சொல்வதில் திறமை உண்டு.  அது தானா வந்தது அல்ல.  என் மாமாவிடமிருந்து வந்தது. அவர் இன்று உயிருடன் இல்லை. இந்த கதையை நான் அவருக்கு சமர்பிக்கிறேன். 

சிறுவயதில் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவன் நான். என்னை பயமுறுதுவதற்காக என் மாமா அடிக்கடி பேய் கதைகளை சொல்வார். நான் கதையின் ஆரம்பத்திலேயே, பயந்து அறைக்குள் ஓடிவிடுவேன். அவர் சொன்ன எந்த கதையையும் நான் முழுசா கேட்டதில்ல. அப்படி ஒரு கதைதான் "கும் நாம்" அந்த கதையில் ஒரு விமானம் செயலிழந்து காட்டினுள் தரையிறக்கப்படும், பின்னர் ஒரு ஆவி விளக்குடன் விமானத்தை நோக்கி வரும். அது வரும்போது "கும் நாம்" எனும் ஒரு சத்தம் கேட்குமாம்!... இதைக் கேட்டதும் நான் ஓடிவிடுவேன்... ஆனால் இன்று நான் அந்த கதையை முழுமைப்படுத்திவிட்டேன்!

இந்த படைப்பிற்கு திறமைதந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்!

எனது ( இடையில் வந்த) ஆசை திரைப்படம் இயக்குவது. அதற்கான ஆரம்பத்தை நான் எடுத்துவிட்டேன் என நம்புகிறேன் :) 

வெற்றி வானொலி படைப்பாளிகளை வளர்க்க தெரிந்த ஒரு சிறந்த வானொலி. "விழிகளில் நூறு கனவுகள்" நாடகத்தின் மூலம் ஒரு இயக்குனராக நான் வெற்றியில் அறிமுகமானேன். இன்று "அந்த 25 நாட்கள்" வானொலி படத்தையும் வெற்றிகரமாக வெற்றியில் ஒலிபரப்பிவிட்டேன். 

நன்றி லோஷன் அண்ணா! பயமின்றி என்னை நம்பி எனக்கு வாய்ப்பு தந்தமைக்கு! ஹிஷாம் அண்ணாவுக்கும் எனது நன்றிகள்.. அவரும் எனக்கு நிறைய விடயங்களை கற்றுத்தருவார்! கதை உருவாக்கங்களில் அதிக ஆர்வமுள்ள பிரதீப் அண்ணா உண்மையிலேயே ஒரு சிறந்த மனிதர் "அந்த 25 நாட்கள்" ஒலிபரப்பின்போது முகப்புதகத்தில் இறுதிவரை பதிவிட்டு நிறைய ஆதரவினை வழங்கினார். ப்ரியா அக்காவும் நண்பி தர்ஷியும் எனக்கு பக்கபலமாக இருந்து வானொலி பட உருவாக்கத்தின்போது எனக்கு தைரியம் தந்தார்கள்! பாபு அண்ணாவின் வாழ்த்துக்கள் எனக்கு மேலும் உற்சாகத்தை அளித்தது. எனது குடும்ப நண்பரும் அலுவலக நண்பருனான கண்ணன் அண்ணா எனக்கு ஒலிபரப்பின்போது நிறைய ஊக்கமளித்தார்! 

நடிகர் தெரிவு !

கதாபாத்திர தெரிவின்போது யாரை எவ்வாறு பயன்படுத்தலாம்  என்று இரண்டு மூன்று தினங்களாக யோசித்தேன்! வில்லன் பிரதீப் அண்ணா, கதாநாயகி தர்ஷி  என்பதை முதலில் உறுதி செய்துவிட்டேன். பின்னர் ஏனைய கதாபதிரங்களுக்கான நடிகர்களை நியமித்தேன். நடிப்பில் அனைவரும் தமது உச்ச கட்ட பங்களிப்பை வழங்கியிருந்தனர். நான் எதிர்பார்த்ததை வெளியில் கொண்டுவந்தனர்!

Also thanks to : Dilogini, Bavaneetha, sakshi, manoj, aaraney & mathurangan, ( For the great performance) 

எனது அடுத்த படைப்பு ஒரு காதல் கதை!

எனது பயணம் தொடரும்!




Wednesday, February 15, 2012

வீங்க வேண்டிய இடமும், வீங்ககூடாத இடமும்!

மனிதனுடைய உடலில் உள்ள முக்கியமான இரு உறுப்புக்களை பற்றிய பதிவுதான் இது.


வீங்க வேண்டிய இடம்!


மனித உடலில் வாங்க வேண்டிய உறுப்பு இதயம். நான் குறிப்பிடும் வீக்கம் கண்ணுக்கு  தெரியும் வீக்கம் அல்ல. இரக்கம், அன்பு, சாந்தம், நல்லெண்ணம், மற்றவர்களை மதிக்கும் பண்பு, தாழ்மை, போன்ற மனிதனிற்கே உரிய உன்னதமான குணங்களினால்  இதயம் வீங்கவேண்டும். அப்பொழுது உயர்வு தானாக வரும்! 


வீங்க கூடாத இடம்!



மனிதன் எவ்வளவு உச்சத்திற்கு போனாலும் அவனது தலை வீங்கக்கூடது. அப்படி வீங்கினால் அதை தலைக்கணம் என்று சொல்வார்கள். கர்வம், பொறாமை, அகந்தை போன்ற துஷ்ட குணங்களே ஒரு மனிதனின் தலையை வீங்க செய்கிறது!. திறமையால் உச்சத்திற்கு போனவர்களின் தலை வீங்கினால் கொஞ்சம் சகித்து கொள்ளலாம். ஒன்னுமே இல்லாம  குருட்டு அதிர்ஷ்டத்தில் மேலே வந்தவர்களின் தலைகள்  வீங்கியிருப்பதை கண்டால்.. சிரிப்புதான் வருகிறது. 

தன்னிலை மறந்தவன், உடுக்கை மறந்த வெறியனுக்கு சமன்!


DOT




Sunday, January 29, 2012

Say Yes or No

நான் எழுதும் இந்த பதிவை வாசித்த பின்னர் சிலவேளைகளில் பலருக்கு என்மீது கோபம் வரலாம்.
ஆனால் எனக்கு தெரிந்த சில உண்மைகளை மற்றவர்களுக்கும் சொல்லவேண்டியது எனது கடமை!
உங்கள் அன்புக்குரியவர் உங்கள் அருகில் இருக்கும் போது, நீங்கள் அவருடன் நேரடியாக பேசுவீர்களா? அல்லது 
அவரைப்போல ஒரு பொம்மை செய்து அதனுடன் பேசுவீர்களா? அல்லது உங்கள் காதலன் அல்லது காதலி நீங்கள் பக்கத்தில் இருக்கும்போதே
உங்களுடன்  பேசாமல் உங்கள் புகைப்படத்துடன் பேசிக்கொண்டிருந்தால் உங்களுக்கு கோபம் வருமா? வராதா?
 
கடவுளும் அப்படித்தான் நண்பர்களே.. நீங்கள் கடவுளை காணாவிட்டாலும் அவர் எப்பொழுதும்  உங்கள் அருகில் இருக்கிறார்.
நீங்களும் கடவுளும் நேரடியாக பேசிக்கொள்ள வாய்ப்பு இருக்கும் போது, எதற்காக கடவுளுக்கும் உங்களுக்கும் நடுவில் ஒரு ஊடகத்தை வைக்கிறீர்கள்? Am i Correct? say Yes or No