புதுசு புதுசா ஏதாவது பண்ணனும் என்கிற ஆர்வக்கோளாறு எனக்கு அதிகம். சின்ன வயசிலையே பொய்க்கதைகள் சொல்வதில் திறமை உண்டு. அது தானா வந்தது அல்ல. என் மாமாவிடமிருந்து வந்தது. அவர் இன்று உயிருடன் இல்லை. இந்த கதையை நான் அவருக்கு சமர்பிக்கிறேன்.
சிறுவயதில் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவன் நான். என்னை பயமுறுதுவதற்காக என் மாமா அடிக்கடி பேய் கதைகளை சொல்வார். நான் கதையின் ஆரம்பத்திலேயே, பயந்து அறைக்குள் ஓடிவிடுவேன். அவர் சொன்ன எந்த கதையையும் நான் முழுசா கேட்டதில்ல. அப்படி ஒரு கதைதான் "கும் நாம்" அந்த கதையில் ஒரு விமானம் செயலிழந்து காட்டினுள் தரையிறக்கப்படும், பின்னர் ஒரு ஆவி விளக்குடன் விமானத்தை நோக்கி வரும். அது வரும்போது "கும் நாம்" எனும் ஒரு சத்தம் கேட்குமாம்!... இதைக் கேட்டதும் நான் ஓடிவிடுவேன்... ஆனால் இன்று நான் அந்த கதையை முழுமைப்படுத்திவிட்டேன்!
இந்த படைப்பிற்கு திறமைதந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்!
எனது ( இடையில் வந்த) ஆசை திரைப்படம் இயக்குவது. அதற்கான ஆரம்பத்தை நான் எடுத்துவிட்டேன் என நம்புகிறேன் :)
வெற்றி வானொலி படைப்பாளிகளை வளர்க்க தெரிந்த ஒரு சிறந்த வானொலி. "விழிகளில் நூறு கனவுகள்" நாடகத்தின் மூலம் ஒரு இயக்குனராக நான் வெற்றியில் அறிமுகமானேன். இன்று "அந்த 25 நாட்கள்" வானொலி படத்தையும் வெற்றிகரமாக வெற்றியில் ஒலிபரப்பிவிட்டேன்.
நன்றி லோஷன் அண்ணா! பயமின்றி என்னை நம்பி எனக்கு வாய்ப்பு தந்தமைக்கு! ஹிஷாம் அண்ணாவுக்கும் எனது நன்றிகள்.. அவரும் எனக்கு நிறைய விடயங்களை கற்றுத்தருவார்! கதை உருவாக்கங்களில் அதிக ஆர்வமுள்ள பிரதீப் அண்ணா உண்மையிலேயே ஒரு சிறந்த மனிதர் "அந்த 25 நாட்கள்" ஒலிபரப்பின்போது முகப்புதகத்தில் இறுதிவரை பதிவிட்டு நிறைய ஆதரவினை வழங்கினார். ப்ரியா அக்காவும் நண்பி தர்ஷியும் எனக்கு பக்கபலமாக இருந்து வானொலி பட உருவாக்கத்தின்போது எனக்கு தைரியம் தந்தார்கள்! பாபு அண்ணாவின் வாழ்த்துக்கள் எனக்கு மேலும் உற்சாகத்தை அளித்தது. எனது குடும்ப நண்பரும் அலுவலக நண்பருனான கண்ணன் அண்ணா எனக்கு ஒலிபரப்பின்போது நிறைய ஊக்கமளித்தார்!
நடிகர் தெரிவு !
கதாபாத்திர தெரிவின்போது யாரை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று இரண்டு மூன்று தினங்களாக யோசித்தேன்! வில்லன் பிரதீப் அண்ணா, கதாநாயகி தர்ஷி என்பதை முதலில் உறுதி செய்துவிட்டேன். பின்னர் ஏனைய கதாபதிரங்களுக்கான நடிகர்களை நியமித்தேன். நடிப்பில் அனைவரும் தமது உச்ச கட்ட பங்களிப்பை வழங்கியிருந்தனர். நான் எதிர்பார்த்ததை வெளியில் கொண்டுவந்தனர்!
Also thanks to : Dilogini, Bavaneetha, sakshi, manoj, aaraney & mathurangan, ( For the great performance)
எனது அடுத்த படைப்பு ஒரு காதல் கதை!
எனது பயணம் தொடரும்!
good work, nkal pajanam thodara an valthukal,
ReplyDelete