Thursday, April 21, 2011
இது இந்த உலகின் வெற்றியின் நாள்.
இற்றைக்கு 2000௦௦௦ வருடங்களுக்கு முன்னர் நானும் நீங்களும் செய்த பாவத்திற்காக இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார். அவர் மரித்தது கிறிஸ்தவர்களுக்காக மட்டும் அல்ல, உலகின் அனைத்து மக்களுக்காகவும் அவர் தன் ஜீவனை பலியாக தந்தார். அந்நாட்களில் ஒருவர் தன்னுடைய பாவங்களை நிவர்த்தி செய்வதற்காக ஆட்டுக்குட்டியையோ அல்லது புறாவையோ பலியிடுவது வழக்கம். ஆனால் தன்னையே ஜீவ பலியாக தந்து ஒட்டு மொத்த உலகத்தின் பாவங்களிற்கும் விலையை செலுத்தி நம்மை மீட்டுக்கொண்டார். சிலுவை மரணத்தின் முழு வேதனையையும் உணர வேண்டும் என்பதற்காகதான் அவர் ஒரு மனிதனாக இந்த உலகிற்கு வந்தார். பாவம் என்னும் சிறையில் இந்த உலகை பிடித்து வைத்திருந்த பிசாசின் தலையை நசுக்கி, மரணத்தின் கூரை உடைத்து நம்மை மீட்டுக்கொண்ட தேவனை நான் என்றும் வணங்குவேன். மறுபடியும் நான் பாவம் செய்தால், அவர் சிலுவையில் எனக்காக செய்த தியாகத்தை நான் வீணாக்குவதாக அமையும்.
Subscribe to:
Post Comments (Atom)
This comment has been removed by the author.
ReplyDeleteஉண்மை ரூபன் அண்ணா.
ReplyDeleteநாம் பாவம் செய்தால், அவரையும், அவரின் தியாகத்தையும் மறந்து விட்டோம் என்பது தான் உண்மை..