கடவுளுக்கு நோய் வருமா?
நானும் நீங்களும் இன்று சுவாசிப்பதற்கு காரணம் கடவுள். நம் நாசியில் தனது சுவாசத்தை வைத்ததும் கடவுள். அப்படி இருக்கும் போது அதே கடவுளுக்கு மூச்சு திணறல் ஏற்படுமா? நோயாளிகளை குணமாக்கும் கடவுளை நோய் தாக்குமா? நான் நாத்திகன் அல்ல, ஆனால் நான் கடவுள் என்று சொல்லும் மனிதர்களை எதிர்ப்பவன். நல்ல காரியங்களை செய்யும் மனிதன் கடவுள் அல்ல, அவன் ஒரு நாள் கடவுளை காண்பான் என்பதே உண்மை. நான் நினைப்பது சரி என்று நான் சொல்லவில்லை, சரியானதையே நான் நினைக்கிறேன். ஒன்றென தெய்வம் உண்டென கொள்வோம்.
You are right ruban anna
ReplyDelete